தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள்!

தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள்!

 

சுகாதாரத்துறை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர் அல்லது அரச உயர் அதிகாரிகள் தவறியமையினால், இன்று (08) தொடக்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழல்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் ஆரம்பக் கட்டமாக வடமேல் மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு சமூகமளிக்காது குருணாகலை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் நடத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நாளை (09) அனைத்து மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் போராட்டமானது இறுதியில் நாடு தழுவிய போராட்டமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் உரிய அதிகாரிகளின் காது, கண் திறக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார நிபுணர்களின் சம்பள ஏற்றத்தாழ்வை நீக்குவதற்குப் பதிலாக, ஓரளவுக்கேனும் தீர்வு வழங்கப்படிருந்த ரணுக் சம்பள முரண்பாட்டு முன்மொழிவை தன்னிச்சையாக நிறுத்தியமை, தொழிற்சார் பட்டதாரிகளின் சம்பளமானது தொடர்ந்தும் டிப்ளோமா மட்டத்தில் உள்ளமை, சேவை வழங்குநர்களின் கடனை செலுத்தாமை, கமிஷன் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேவையற்ற உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்களை கொள்வனவு செய்து குவித்து வைத்து பணத்தை நாசமாக்குவதனூடாக சுகாதார சேவை கட்டமைப்பை சிதைவடையவிடல், கட்டுப்பாடற்ற மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் விலை தொடர்பில் பொது மக்களின் தேவையை புறக்கணித்தல் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி இப்பணிப்பகிஷ்ரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image