ஆசிரியர் - அதிபர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆசிரியர் - அதிபர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை - அமைச்சரவை பேச்சாளர்

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதற்கான தேவை உணரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை (24) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை நிதி அமைச்சர் பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு பல்வேறு சம்பள அளவுத்திட்டங்கள் இருந்தன. எனது ஞாபகத்தின்படி, 138 சம்பள அளவுத் திட்டங்கள் அளவில் இருந்தன. பரஸ்பர தன்மை பல இருந்தன.

அவை அனைத்தையும் சரிசெய்து, ஒட்டுமொத்த அரச சேவையின் சம்பள அளவுத்திட்டங்களையும், என ஞாபகத்தின்படி, 38 அல்லது 36 இற்கு குறைத்து, அரச சேவைக்கு புதிய நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

அது 2006. தற்போது 2021. தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ளன. எனவே தான் அவ்வாறானதொரு தேவை தற்போது எழுந்துள்ளது.

அதிபர், ஆசிரயர்கள் விடயத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. 24 ஆண்டுகளாகக் காணப்படும் சம்பள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்துள்ளது.

எனவே, நாட்டின் பொருளாதாரம் சீரடைகின்ற சந்தர்ப்பத்தில் அனைவரும் சாதகமாக பார்க்க வேண்டும் என்பதே பொதுவான நிலைப்பாடாகும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image