கர்ப்பிணி ஊழியர்களை மீள பணிக்கு அழைப்பது ஆபத்தானது

கர்ப்பிணி ஊழியர்களை மீள பணிக்கு அழைப்பது ஆபத்தானது

நாட்டில் தொற்று நிலை இன்னும் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் கர்ப்பிணி ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளில் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் மேற்கொள்ளும் நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில கட்டுப்பாடுகளுடன் கர்ப்பிணி ஊழியர்களை பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் இதனூடாக கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று முற்றாக ஒழிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கர்ப்பிணி ஊழியர்களை மீள பணிக்கு அழைப்பது மறுபடியும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்.

ஏற்கனவே குறைந்த ஊழியர்களுடன் அரசசேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவச அவசரமாக கர்ப்பிணி ஊழியர்களை பணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image