பேரணியில் கலந்துகொண்ட அதிபர் ஆசிரியர் மீதான விசாரணை இன்று

   பேரணியில் கலந்துகொண்ட அதிபர் ஆசிரியர் மீதான விசாரணை இன்று

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி பேரணியாக வந்த அதிபர் ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிராக அண்மையில் கண்டில் இருந்து கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது.எனினும் பேரணியில் கலந்துகொண்ட 26 அதிபர் ஆசிரியர்களுக்கு எதிராக பொலிஸார் கண்டி நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் சங்கைக்குரிய உலப்பனே சுமங்கல தேரர் எமது இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், என்ன தடைகள் வந்தாலும் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியம் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இறுதிதீர்மானம் எடுப்பதற்கு தீர்வு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ள ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image