நாடு இருளில் மூழ்குமா? கொழும்புக்கு படையெடுக்கும் மின்சார சபை ஊழியர்கள்

நாடு இருளில் மூழ்குமா? கொழும்புக்கு படையெடுக்கும் மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலய முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளது.



தேசிய வளங்கள் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அழுத்தம் கொடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகளை இரத்துச் செய்வதாக மின்சார சபை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு  சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டனரென இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்க வேண்டாம். நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், நாங்கள் கொழும்புக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டு'ள்ளது. அத்தியாவசிய மின்சாரத்தடை சீரமைப்பு பணிகள் இடம்பெறும். எனினும், மிகப்பெரிய மின்சார விநியோகத்தடை இடம்பெறுமாயின், அதனை வழமைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்படும்.

இந்த நிலையில், சுற்றறிக்கை வெளியிட்டு, அழுத்தம் கொடுத்து, அச்சுறுத்தி, இந்த உடன்படிக்கையை இரத்துச் செய்யாமல், பயணிக்க முயற்சித்தால், வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்;.

தேசிய பாதுகாப்புக்கு எதிரான உடன்படிக்கையை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image