மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்

மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்

நடமாட்டத் தடை நீக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டுமொரு கொவிட் அலை தோன்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்தவ அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடமாட்டத் தடை நீக்கப்பட்ட நாடுகளான பிரித்தானியா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கமைய, இலங்கையில் அவ்வாறான ஒரு நிலை மீண்டும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அமைப்பு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மருத்துவ அமைப்பின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்னவின் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் உரிய நடவடிக்கை உரிய நேரத்தில் எடுப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மீண்டும் ஒரு கொவிட் அலை ஏற்படுமாக இருந்தால் ஆரோக்கியத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்." 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்குக் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுள்ளவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர்) வழங்கல், தற்போதைய விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவது போன்றவற்றை இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்ததுடன் சுகாதார நிபுணர்களுக்கு தாமதமின்றி ஊக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அதிகம் தொற்று பரவக்கூடிய சந்தர்ப்பங்கள், நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறும் வழமையான COVID-19 தடுப்புக்கான வழக்கமான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் இவ்வமைப்பு வலியுறுத்தியதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image