போராட்டத்தின் அடுத்தக்கட்டம் என்ன? அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி விளக்கம்

தங்களது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தக்கட்டம் என்ன என்பது குறித்து அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி விளக்கமளித்துள்ளது.
 
இதேவேளை, கடந்த 21ஆம், 22ஆம் திகதிகளில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுத்த நிலையில், குறித்த தினங்களில் பாடசாலைகளுக்கு சமுகமளித்தவர்கள் சமுகமளிக்காதவர்களின் பெயர் விபரங்களை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  கடிதம் மூலம் கோரியுள்ளதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
 
குறித்த தினங்களில் அடையாள பணிப்புறக்கணிப்பில் தாங்கள் ஈடுபட்டதை தொழிற்சங்கங்கள் முறையாக அறிவித்துள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
தொழிற்சங்க சட்ட விதிகள் அமையவே இந்த போராட்டங்களை நாங்கள் முன்கொண்டு செல்கின்றோம். எனவே, இதுபோன்ற செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  
 
வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பிரதேச தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம். போராட்டம் வெற்றி பெறும் வரையில் முன்கொண்டு செல்வோம் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் விளக்கமளிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்த இணைப்பிலும் காணொளியை காணலாம். அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி ஊடக சந்திப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image