அரசின் தீர்வை ஏற்க முடியாது - போராட்டம் தொடரும்- அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு

அரசின் தீர்வை ஏற்க முடியாது - போராட்டம் தொடரும்- அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசு முன்வைத்த தீர்வுக்கு தாம் உடன்படப்போவதில்லை என்று அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்று (13) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று (12) பிரதமர், திரைசேரி ஆளுநர், கல்வியமைச்சர் உட்பட அரச தரப்பினர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் சுபோதினி முன்மொழிவுக்கமைய அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஓரே தடவையில் தீர்க்குமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு கோரியிருந்தது. எனினும் அதற்கு அரசாங்கம் இணங்காது மூன்று தடவைகளில் வழங்க முன்மொழிந்தது. எனினும் எமது கோரிக்கை ஒரே தடவையில் எமக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 30 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுகிறது. அதையும் விட தேவையில்லாத பல விடயங்களுக்கு அதிக பணத்தை அரசாங்கம் செலவிட்டு நாசமாக்குகிறது. எமக்கு உரித்தான பணத்தை வழங்குவதில் மாத்திரம் பின்நிற்பது ஏன்?

 

அரசாங்கம் எதிர்வரும்2022 ஜனவரி மாதம் முதற்கட்டமும் 2023 ஜனவரி மாதம் 2ம் கட்டமும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் கட்டமும் வழங்குவதாக அறிவித்திருந்தது. மூன்று மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட பேச்சுக்களில் மீண்டும் ஒரு பகுதியை ஜனவரி மாதத்திலும் மிகுதியை வரவு செலவில் இணைத்து வழங்க முடியுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அரச தரப்பில் கூறப்பட்டது. எனினும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இதற்கு இணக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி 200 பேருக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. பாடசாலைகள் திறந்தாலும் நாம் பாடசாலைக்கு சமூகமளிக்கப்போவதில்லை. எனவே அதற்கு முன்னர் உரிய தீர்வை வழங்குங்கள்.

ஆரம்பத்தில் எமக்கு வழங்கவேண்டிய உத்தேச சம்பளத்தில் 12 ஒரு பகுதி வழங்குவதாக கூறப்பட்டது. நேற்றைய பேச்சுவார்த்தையின் பின்னர் உத்தேச சம்பளத்தின் 9 இல் ஒரு பகுதி வழங்குவதாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்கான வழங்க வேண்டிய தொகை ஒரே தடவையில் வழங்கப்படவேண்டும். பாடசாலை ஆரம்பிக்க இன்னும் 7 நாட்கள் உள்ளன. 7 நாட்களில் தீர்வை வழங்குங்கள். ஏற்கனவே நாம் 94 நாட்கள் போராடிவிட்டோம். இன்னும் எத்தனை நாட்கள் போராட வேண்டும் 100 நாளா? 150 நாளா? நாம் போராடத் தயார். அதிபர் ஆசிரியர்களே மனம் தளராதீர்கள். நமது போராட்டம் வெற்றியடைய ஒத்துழையுங்கள் என்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்டது.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உட்பட தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image