பயிற்சிபெறும் அமைச்சுக்களில் பயிலுநர்களுக்கு நியமனம்?

பயிற்சிபெறும் அமைச்சுக்களில் பயிலுநர்களுக்கு நியமனம்?

தற்போது பயிலுநர் பட்டதாரிகள் சேவையாற்றும் அமைச்சுக்களில் அவர்களை நிரந்தர நியமனத்தில் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பயிலுநர் பட்டதாரிகளை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் தலைமையில் நேற்றுமுன்தினம் (11) காலை பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உபகுழு அங்கத்தவர்களான சபாநாயகர், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image