ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில்

ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில்

தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான சட்டமூலததை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் ஊழியர்கள் தற்போது ஓய்வு பெறுவதற்கான வயதெல்லையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபை தயாரிப்பதற்கான அனுமதியை 23.03.2021 அன்று அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய, தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைபு குறித்து பிரதமர் தலைமையில் ஆடை உற்பத்தி, வர்த்தகதுறை என்பவற்றுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய கொள்கை ரீதியான, சட்டரீதியான விடயங்கள் குறித்து கவனம் செலுத்து குழுவில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த குழுவின் தீர்மானத்திற்கமைவாக 52 வயதுக்க குறைந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்துவதற்கும் சட்டமூலம் நடைமுறைப்படுத்தும் தினத்தில் 52 வயது பூர்த்தியடைந்த ஊழியர்களுக்கு வயதுக்கமைய 3 கட்டமாக ஆகக்கூடிய வயதாக 59 வரை சேவையில் ஈடுபடும் வகையில் விதிமுறைகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image