ஆசிரியர் தினம் கருப்பு தினமாக அனுஸ்டிப்பு – இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்

ஆசிரியர் தினம் கருப்பு தினமாக அனுஸ்டிப்பு – இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஏனைய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்த இன்று (06) காலை ஹட்டன் உட்பட இலங்கை முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்த உள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஆர்.சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாக கோரிகை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்த்தலில் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக்கொண்டும் தீர்வினைப் பெற்று தராது அரசு தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இதனால் கடந்த 80 நாட்களுக்கு மேலாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்தி வரும் பணிபகிஸ்கரிப்பினையும் கண்டுக் கொள்ளாத அரசு சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை இதுவரை வழங்கவில்லை.

எனவே சம்பள முரன்பாட்டிற்கான தீர்வினை உடன் பெற்றுத்தர வேண்டும் என கோரியே ஆசிரியர் தினத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம். கொவிட் 19 கொரோனா தொற்றின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக குறைந்த அளவிலானவர்களின் பங்குபற்றுதலோடு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அட்டன் நகர மத்தியிலும் நாடளாவிய ரீதயிலும் மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஆர்;.சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image