ஆசிரியர் சங்க பிரதிநிகள் நிதியமைச்சருடன் கலந்துரையாடல்- கல்வியமைச்சு இணக்கம்
நிதியமைச்சர் பசில் ராஜக்ஷவுடன் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (16) அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்வியமைச்சின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் கல்வியமைச்சின் செயலாளர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டத்தை தொடர்வதை தவிர வேறு வழியில்லை. கல்வியமைச்சு தலையிட்டு நிதியமைச்சுடன் கலந்துரையாடுவதாக இன்றுதான் எமக்கு கூறப்பட்டது. இவ்வளவு தாமதப்படுத்தாமல் இந்த தீர்மானத்தை கல்வியமைச்சு எடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம் - தினமின