தனிமைப்படுத்தல் ஊரடங்கு  நீடிக்கப்பட வேண்டும் - தொற்று நோயியல் நிபுணர்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு  நீடிக்கப்பட வேண்டும் - தொற்று நோயியல் நிபுணர்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படவேண்டும் முன்னாள் பிரதம தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று (22) ஏற்பாடு செய்திருந்த செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே டொக்டர் நிஹால் அபேசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நோய்த்தொற்றுகள், இறப்பு, மருத்துவமனைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் குணமாக என பல விடயங்களுக்கு இந்த மேலதிக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாட்கள் உதவும் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் 10 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதே அனைத்து மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். தடுப்பூசி மாத்திரமே கொவிட 19 தொற்றுக்கு தீர்வல்ல. ஆனால் வைரஸுக்கு எதிரான சிறந்த தீர்வுபயணக் கட்டுப்பாடுகள் இன்னும் பத்து நாட்களுக்கு அமுலில் இருக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

டாக்டர் அபேசிங்க, கோவிட் -19 க்கு தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல, ஆனால் இது வைரஸுக்கு எதிரான சிறந்த தீர்வு.

கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே தீர்வு தடுப்பூசி அல்ல. உதாரணமாக, இஸ்ரேலில், 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 78% க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனினும் டெல்டா திரிபு பரவுவதனால் அந்நாட்டில் தொற்று மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, தொடர்ந்தும் சமூக இடைவௌி (ஒரு மீற்றர்) கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் டொக்டர் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image