வெளிநாட்டு தொழிலுக்கு செல்வோருக்கு தடுப்பூசி செலுத்த கட்டணம் அறவிடப்படுமா?

வெளிநாட்டு தொழிலுக்கு செல்வோருக்கு தடுப்பூசி செலுத்த கட்டணம் அறவிடப்படுமா?
தொழிலுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிக்காக கட்டணம் அறவிடப்படுமா? என்பது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கமளித்துள்ளது.
 
தொழிலுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் உங்களுக்கு வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகாக எவ்வித கட்டணமும் அறவிடப்படும் மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுள், 1985 இலக்கம் 21  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்திற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய பதிவுக் கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
 
அந்தக் கட்டணம் கொவிட்-19  தடுப்பூசிகாக அறவிடப்படும் கட்டணம் அல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
 Mig_vaccine.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image