நிருவாக, திட்டமிடல் சேவைகளில் அரச ஊழியர்களை இணைப்பதில் அநீதி

நிருவாக, திட்டமிடல் சேவைகளில் அரச ஊழியர்களை இணைப்பதில் அநீதி

நிருவாக சேவை மற்றும் திட்டமிடல் சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகளில் போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அரச ஊழியர்களை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையானது அரச ஊழியர்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது. அப்போட்டிப்பரீட்சையில் தோற்ற முழு அரச ஊழியர்கள் 20 வீதமானவர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

திறந்த போட்டிப்பரீட்சையினூடாக வௌியிலிருந்து 80 வீதமானவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கு அரச சேவையில் உள்ளவர்கள் 5 வருட கால அரச சேவையை பூர்த்தி செய்திருக்கு வேண்டும். எனவே அனுபவம் உள்ள அரச அதிகாரிகளை இச்சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் உள்வாங்கும் வீதத்தை மாற்றுமாறு அதிகாரிகளிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, அரச சேவையில் உள்ள 40 வீதமானவர்களுக்கும் சேவையில் இல்லாத 60 வீதமானவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 60,000 அபிவிருத்தி அதிகாரிகள் மாத்திரம் உள்ளனர். இதுதவிர ஏனைய சேவைகளில் உள்ளவர்களும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image