நீண்டநாட்களுக்குப் பின்னர் அரச அலுவலகங்கள் இன்று (02) முதல் வழமைப்போன்று இயங்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அரச ஊழியர்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவை ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச ஊழியர்கள் எவ்வித தடையுமின்றி அரச சேவைக்கு சமூகமளிக்க இடமளிக்குமாறு அனைத்து அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் சேவைக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் அனுமதி தேவையேற்படின் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முன்னெடுப்பது அவசியம் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.