ஆசிரியர்கள் கடமைக்கு திரும்ப வேண்டுமா? கூட்டு தொழிற்சங்க அறிவித்தல் இதோ...

ஆசிரியர்கள் கடமைக்கு திரும்ப வேண்டுமா? கூட்டு தொழிற்சங்க அறிவித்தல் இதோ...

ஆசிரியர்கள் இ்ன்று முதல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவித்தலுக்கு அமைய செய்யப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்தல் விடுத்துள்ளது.


இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க நேற்றையதினம் காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி அறிவிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு அமைய நாங்கள் சேவைக்கு சமூகமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை மத்தியிலேயே செயலாளரினால் இவ்வாறான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அரச சேவைகள் அமைச்சினால் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (நேற்று) இந்த கடிதம் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினால் கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு அமைய நாளை (இன்று) முதல் சேவைக்கு சமூகமளிக்க நாங்கள் தயாராக இல்லை என்பதை கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் (இன்று) அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக பிரதமரினால் எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை ஒன்று வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஸினால் கூறப்பட்டுள்ளது இவ்வாறான நிலையில் நாங்கள் இதுவரையில் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் வகையில் இப்படியான ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த ஒரு ஆசிரியரும், அதிபரும் இந்த கடிதத்திற்கு அமைய சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்களுடைய தொழில் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image