தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்காதீர்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்காதீர்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்காதீர்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது குறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளால் நாளுக்கு நாள் மரணமும், தொற்றும் அதிகரித்தே செல்கின்றது.

பாடசாலைச் சமூகம் சார்ந்த அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றாமல் பாடசாலைகளை ஆரம்பிக்கக் கூடாது என அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதையும் மீறி பாடசாலைகளை ஆரம்பிக்கும் நாளைத் தள்ளிப்போடுவதுபோல் அறிவித்துவிட்டு ஆசியர்களையும் மாணவர்களையும் பாடசாலைகளுக்கு வரவழைத்து காலை.7.30 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அதிபர், ஆசிரியர், மாணவர் என தொற்றாளர்கள் இனம்காணப்படுவதோடு அபாயகரமான டெல்டா வைரஸ் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோர் மனதில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்கு அப்பால் நோய்தொற்று குழந்தைகளுக்குப் பரவுவது ஆபத்தானது.

ஆகையால் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத எவரையும் பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என வினயத்துடன் கேட்டுக் கொள்கின்றோம். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image