அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கருத்து

அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கருத்து

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து, இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 
எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, மாணவர்களுக்கான இணையவழி கற்பித்தலில் ஈடுபடுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா  தெரிவித்துள்ளார்.
 
ஹொரனை பகுதியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய யோசனை நாளை (இன்று) தினம், அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
 
அமைச்சரவையின் கலந்துரையாடலில் எட்டப்படும் முடிவுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா  தெரிவித்துள்ளார்.
 
மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image