ஹிஷாலினிக்கு நீதி! வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டரீதியானதாக்கு!

ஹிஷாலினிக்கு நீதி! வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டரீதியானதாக்கு!

வீட்டுப் பணியாளர்களின் அமைப்பான 'ப்ரொடெக்ட்' (Protect) சங்கத்தினால் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொட்டக்கலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.



கொட்டக்கலை பிரதேச சபைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச மக்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும், இலங்கையில் சி.189 சமவாயம் அமுல்படுத்தப்பட வேண்டும், இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடா.

ஹிஷாலினிக்கு நீதி!

சிறுவர் தொழில் மற்றும் சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து!

வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டரீதியானதாக்கு!

துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!

என கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியால கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image