ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கும்வரை போராட்டம் தொடரும்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கும்வரை போராட்டம் தொடரும்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கும்வரை போராட்டம் தொடரும்.

இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு கல்வி வலய செயலாளரும் மாவட்ட மத்திய குழு உறுப்பினருமான க. கோகிலறமணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள ஜே.வி.பி. கட்சி காரியாலயத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகசந்திபபில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,
 
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்த நிலையில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அந்தவகையில் கிழக்கு மாகாணத்தை பெறுத்தமட்டில் மட்டக்களப்பில் இருக்கின்ற 5 கல்வி வலயங்களும் அதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கி நிகழ்நிலை கற்பித்தல் நிலையில் விலகி பூரண ஆதரவை வழங்கிவருகின்றோம். 
 
அதிபர்; ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு, ஒன்லைன் கற்பித்தலுக்கு மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் போதிய வசதிகளை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். கொத்தலாவை சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். ஆகிய 3 விடையங்களை முன்வைத்து இந்தபோராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது 
 
இது ஒரு தனிமனித போராட்டம் அல்ல. மாணவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 30 வருட காலத்துக்கு மேலாக அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கங்கள் மாறி மாறி வருகின்றபோதும் இதுவரை ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைத்து வருவதை போன்று தொடர்ச்சியாக ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
 
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்பது பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தி இராணுவத்தை அதற்குள் உட்புகுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தை தடுப்படுத்து தனியார் மயப்படுத்துகின்ற மற்றும் அஹிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட எமது சங்க உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுவதையும் வன்மையாக கண்டிக்கின்றோம். 
 
கடந்த ஒன்றரை வருடங்களாக மாணவர்கள் கற்றல் விடயத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை இந்த அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றகரமான விடையங்களை எடுக்கவில்லை. கிராமபுறங்களிலே அதிகமான மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒன்லைன் கற்பித்தில் ஒர்; இடர்பாடான நிலையாக காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவைகள் அனைத்தும் சீர் செய்யப்படவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image