பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்காமைக்கான காரணம் வெளியானது

பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்காமைக்கான காரணம் வெளியானது

பயிலுனர்களாக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் இதுவரையில் நிரந்தரமாக்கப்படாமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறியை நேற்று சந்தித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு குறித்து தம்மிக்க முனசிங்க கருத்து தெரிவிக்கையில்,
 
தற்போது 9 மாதங்கள் கடந்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதியாகும்போது ஓராண்டு நிறைவடைகின்றது. ஆசிரியர் நியமனம் வழங்கல் அல்லது பணியாற்றும் இடத்தில் நிரந்தரமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
 
இந்த நிலையில், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறியை நேற்று சந்தித்தோம். 
 
இந்தப் பயிற்சி தற்போதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ளமையால், நிரந்தரமாக்குவதில் பிரச்சினை உள்ளதாக அவர் கூறினார். 
 
இந்த நிலையில், ஒரு வருட பயிற்சியின் பின்னர் நிரந்தரமாக்குவதாக கூறி, பயிலுனர்களாக பட்டதாரிகளை இணைக்கப்பட்டதாக நாங்கள் அவரிடம் கூறினோம், 20,000 ரூபா என்ற குறைந்த கொடுப்பனவே வழங்கப்படுகின்றனது.
 
இந்த விடயத்தில் விளையாட வேண்டாம். பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் என 53,000 பேர் உள்ளனர். செப்டம்பர் 3ஆம் திகதி கட்டாயமாக நிரந்தரமாக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், நாங்கள் பயிலுனர்கள், பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்துக்கு தயாராவோம் - என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image