ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்தி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் வவுனியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (23) ஆரம்பமான குறித்த பேரணி அங்கிருந்து மணிக்கூட்டு சந்தியை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையப்பகுதியை அடைந்தது. போராட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்.,

ஆசிரியர்களின் சம்பளமுரன்பாடுகளை தீர்ப்பதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும் அதனை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கையினையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. இதனால் எமது வாழ்க்கைச்செலவு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இதேவேளை, ஜோன் கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலமானது கல்வித்துறையில் இராணுவத்தலையீடுகளை ஏற்படுத்துகின்ற அபாயநிலையை ஏற்படுத்தயுள்ளது. அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர் உழைப்பை சுரண்டாதே? தரமான இலவசக் கல்வியினை விற்காதே, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image