கல்வி ஊழியர்களின் கூட்டுறவு நிதிப்பயன்பாட்டில் மோசடி- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
வரையறுக்கப்பட்ட கல்வி ஊழியர்களின் கூட்டுறவு மற்றும் சிக்கன, கடனுதவி சங்கம் (EDCS) உறுப்பினர்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எமது ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட இந்நாட்டின் பெரும்பான்மையான ஆசிரியர்களின் அங்கத்துவத்துடன் செயற்படும் மேற்படி எந்த வகையிலும் தமது சேவையினை சங்கத்திற்கு வழங்காத வெளி நபர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பாக எமது ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பாட்டினை செய்துள்ளனர்.
எமது இணையதளம் தொடர்பான ஆய்விற்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தினால் தமது அரசியல் நண்பர்கள் 300 க்கு அதிகமானோருக்கு நாள் சம்பள அடிப்படையில் சங்கத்தின் வெவ்வேறுபட்ட பிரிவுகளுக்கும், காரியாலயங்களுக்கும் சம்பளம் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து காரியாலய நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தல் காரணமாக மேற்குறிப்பிட்ட பணியாளர்கள் சேவைக்கு அழைக்கப்படாத சந்தர்ப்பத்திலும் அவர்கள் சேவைக்கு வருகை தந்ததாக தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் ரூபா 8000000 இற்கு கிட்டிய பணமும் மே மாதம் ரூபா 7800000 கிட்டிய பணமும், ஜூன் மாதம் 7800000 கிட்டிய பணமுமாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் நிர்வாகத்தினரால் உறுப்பினர்களின் பணம் தான்தோன்றித்தனமாக தனது அரசியல் நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு நாள் சம்பளமாக அநீதியான விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
சங்கத்தில் அங்கத்தவர்களின் பணம் முறைக்கேடான விதத்தில் பயன்படுத்துவது தொடர்பாக தாங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்.
2016 ஆண்டு கல்வி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக பொறுப்பினை ஏற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியதோடு அங்கத்தவர்களின் பணமும் சங்கத்தினால் பாதுகாக்கப்பட்டது. பின் 2019 ஆண்டு நிருவாக பொறுப்பினை ஏற்ற பொது ஜன பெரமுன ஆசிரியர் பிரதிநிதிகளின் கீழ் இவ்வாறான முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவதாக கல்வி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் உப தலைவர் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.