பட்டதாரிகளை நேரடியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்கு உள்வாங்குவதற்கான செயற்றிட்டமொன்று எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதுவரை பட்டதாரிகள் நேரடிய உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்கு மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர். எதிர்காலத்தில் நேரடியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்கு உள்வாங்குவது தொடர்பான முன்மொழிவு ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து முன்னோக்கி செல்லும்போது மக்களுடன் அடிமட்டத்தில் இருந்து கடமைகளை முன்னெடுப்பது தொடர்பான அனுபவங்களை ஓரளவுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதனைக் கருத்திற்கொண்டு இம்முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்துறையில் பணிகளை முறைப்படுத்த பல பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.