ஆட்சேர்ப்பு தொடர்பாக அரச சேவைகள் அமைச்சரின் அறிவித்தல்

ஆட்சேர்ப்பு தொடர்பாக அரச சேவைகள் அமைச்சரின் அறிவித்தல்

தற்போதைய கொரோனா உலகப் பெரும் தொற்றுக்கு மத்தியில் தங்களது உயிர் ஆபத்தையும் கருத்திற் கொள்ளாமல் நாட்டை நிலையாக வைத்திருப்பதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஆற்றும் அர்ப்பணிப்புக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் 14,000 இற்கும் அதிகமானோர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணி நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ், 2020ஆம் ஆண்டு 57,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் பயினர்களாக பயிற்சிக்காக சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கணக்காய்வாளர் சேவை தரம் I க்கு 116 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் Iமற்றும்  II ஆம் தரங்களுக்காக எதிர்வரும் 3 மாதங்களுக்குள் 170 பேரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை விஞ்ஞான வியல் சேவைக்கு 29 அதிகாரிகளை நியமிக்க உள்ளதுடன், இலங்கை பொறியியல் சேவைக்கு 211 அதிகாரிகளை எதிர்காலத்தில் ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இலங்கை நிர்வாக சேவைக்கு திறன் அடிப்படையில் 54 பேர் ஆட்சேர்க்கப்படுவதுடன், போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்த 203 பேரை எதிர்காலத்தில் விரைவில் ஆட்சேர்க்க எதிர்பார்க்கிறோம். - என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image