அரச- தனியார் நிறுவன பணியாளர்களுக்கான விசேட நடைமுறைகள்

அரச- தனியார் நிறுவன பணியாளர்களுக்கான விசேட நடைமுறைகள்
அரச, தனியார் நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் பெருந்தோட்டத்துறை என்பன செயற்படவேண்டிய முறைமை தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
 
நாளை 21ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த நடமாட்ட கட்டுப்பாடுகள்  சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
உபயோக சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள்
 
1. அவசியமான ஆகக்குறைந்த பணி குழுவினருடன் செயற்பட முடியும்.
 
2. இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு ஊக்குவித்தல்.
 
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்
 
1. அவசியத் தன்மை கருதி நிறுவன பிரதானிகளினால் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை தீர்மானித்தல்.
 
2. அவ்வாறு செயலாற்றும் பொறுப்பு நிறுவன பிரதானிக்கு உரியது.
 
3. இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு பணியாளர்களை ஊக்குவித்தல்.
 
நிறுவன கூட்டங்கள்
 
1. அவசியமாயின் மாத்திரம் நடத்துதல்.
 
2. பங்குபற்றினர்களின் எண்ணிக்கையை 10 இற்கு மட்டுப்படுத்தல்.
 
3. மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதி இல்லை.
 
 
பொதுப் போக்குவரத்து.
 
1. ஆசன கொள்ளளவில் 50 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தல்.
 
2. மேல் வாகனத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம்.
 
3. தனியார் மற்றும் வாடகை வாகனங்களில்  அதிகபட்சம் இருவர் மாத்திரம் பயணிக்க முடியும்.
 
ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட ஏனைய கைத்தொழிற்சாலைகள் விசேட உயிர் குமிழி முறைமையாக செயற்படுதல் வேண்டும்.
 
விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறையில்  செயற்படுவதற்கு தடையில்லை.
 
திறந்தவெளி சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் உள்ளுராட்சி நிறுவனங்ளினால் அமுலாக்கலாக்கப்பட்டுள்ள கடுமையான  கட்டுப்பாடுகளுடன் திறத்தல்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image