நாளை முதல் ஜுலை 5 வரை பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டல்கள் அறிவிப்பு

நாளை முதல் ஜுலை 5 வரை பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டல்கள் அறிவிப்பு

நாளை (21) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு வீட்டிலிருந்து அதிகபட்சம் இருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும்.
  • மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் பொது போக்குவரத்துகளில் 50 சதவீதமானோர் பயணிக்க முடியும்.
  • மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும்.
  • தனியார் மற்றும் வாடகை வாகனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.
  • அரச மற்றும் தனியார் சேவை நிலையங்களில் தேவையான அளவு சேவையாளர்களை அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும்.
  • வீடுகளில் இருந்து சேவையாற்ற கூடிய வகையிலும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் நிறுவனங்களில் கூட்டங்களில் 10 பேர் கலந்து கொள்ள முடியும்.
  • மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • மேல் மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் 25 பேருடன் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்தில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • தொழிற்சாலைகளில் உயிர் குமிழி முறைமை பின்பற்றப்பட வேண்டும்.
  • நிதிநிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.
  • தேவையான பணியாளர்கள் மாத்திரமே நிதி நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும்.
  • மொத்த விற்பனைகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்களும், கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாராந்த சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
  • பதிவு செய்யப்பட்ட நடமாடும் வர்த்தகர்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image