அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதாக கூறி, கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பான சோதனைகளுக்கு 06 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதாக கூறி கொழும்புக்குள் பிரவேசிக்கின்றவர்கள், உண்மையிலேயே அவ்வாறான சேவைகளில் ஈடுபடுகின்றனரா? என்பது குறித்து இந்த பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் போர்வையில், தனிப்பட்ட செயற்பாடுகளுக்காக பலர் கொழும்புக்குள் பிரவேசிப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.