சுற்றறிக்கையை மீறி கர்ப்பிணித் தாதியர்கள் சேவைக்கு அழைப்பு

சுற்றறிக்கையை மீறி கர்ப்பிணித் தாதியர்கள் சேவைக்கு அழைப்பு

கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் கர்ப்பிணித் தாதியர்களை சேவைக்கு அழைப்பை தவிர்க்குமாறு அகில இலங்கை தாதியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் கொவிட்19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட அரசின் பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2021.05.10 ஆம் திகதி இலக்கம் 02/2021(11) என்ற பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் தற்போதைய கொவிட் பரவல் நிலையுடன் சில கர்ப்பிணி பெண்களும் உயிரிழந்திருக்கின்றனர்.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் முன்னிலை பணியாளர்களாக உள்ள தாதியர் பணி குழுவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த நியாயமற்ற நிலைமை தொடர்பில் நாங்கள் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தி இருக்கின்றோம்.

கடந்த 31ஆம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மகப்பேற்றுக்கு ஆறு மாதத்திற்கும் குறைந்த காலத்தை கொண்டுள்ள தாதியர்களை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகள் இல்லாத பிரிவுகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுத்துமாறு அறியத்தரப்பட்டுள்ளது.

நாங்கள் அறிந்த வரையில் இதுவரையில் அனைத்தும் வைத்தியசாலைகளிலும் அவதானிக்க நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சை வார்டுகளிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நிலைமைக்கு மத்தியில் கர்ப்பிணித் தாதியர்களுக்கு, வைத்தியசாலைகளில் உள்ள வார்ட்கள் ஆபத்தாக உள்ளது.

எனவே, இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் தலையீடு செய்ய வேண்டும் என குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image