அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் சார்பில் அவசர கோரிக்கைகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் சார்பில் அவசர கோரிக்கைகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தியாவசிய வசதிகள் இதுவரையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என ஒன்றிணைந்து அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு மத்திய நிலையம் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
 
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது வரையில் அபிவிருத்தி அதிகாரிகள் இரண்டு பேரும், பயிலுநர் ஒருவரும் உயிரிழந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
 
தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாங்கள் முன்னதாக சேவையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் உரிய தலையீடுகள் செய்யப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
 
கடந்த 27ஆம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில், தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றபோதும் இன்றுவரை உத்தியோகத்தர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளத்தையோ அல்லது சம்பளத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படவில்லை இல்லாவிட்டால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறையாக வில்லை.
 
இந்தநிலையில் நிலவுகின்ற அத்தியாவசிய கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கின்றோம்.
 
  1. மேலும் தாமதப்படுத்தாமல் கொவிட் தடுப்பூசியை வழங்கல் 
  • முகக்கவசம், தொற்று நீக்கி திரவம் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை வழங்குதல்
  • போக்குவரத்து வசதிகளை வழங்குதல் (அலுவலக மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்)
  • அத்தியாவசிய தேவைகளுக்காக அழைக்கப்படும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கு கொவிட் அச்சுறுத்தல் கொடுப்பனவு வழங்குதல்
  • சேவைக்காக அழைக்கப்படும் போது பாலூட்டும் தாய்மார்களுக்கு நிவாரணம் வழங்குதல்
  • புதிதாக ஆட்சேர்க்கப்படும் பயிலுநர்களின் அவசர ஆட்சேர்ப்பு நிறுத்துதல் மற்றும் துறைசார் பணிகளுக்காக அனுப்பப்படுவார்களாயின் விசேட கொடுப்பனவை வழங்குதல்.

5,000 ரூபா பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் இதோ....

 
குறிப்பாக புதிதாக சேர்க்கப்படும் பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள், சேவைகளுக்காக ஈடுபடுத்தப்படும்போது மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச செயலக மட்டத்தில் வேலைத்திட்டம் இல்லை.
 
20,000 ரூபா என்று குறைந்தபட்ச சம்பளத்தை கொடுப்பனவை வழங்கி அலுவலக மற்றும் துறைசார் சேவைகளுக்கு  டிப்ளோமாதாரகள் மற்றும் பயிற்றுநர்களை ஈடுபடுத்தல். அவர்களுக்கு எந்தவித போக்குவரத்து ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஏனைய உத்தியோகத்தருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
 
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அத்தியாவசிய கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என ஒன்றிணைந்து அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் லக்மால் திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில். தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image