அபிவிருத்தி உத்தியோகத்தர், பயிலுநர் பட்டதாரிகள் சேவைக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர், பயிலுநர் பட்டதாரிகள் சேவைக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்கள்

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இன்மையினால் சேவைக்கு சமூகமளிப்பதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க ​வேண்டியுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பொது சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

 சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சியின் கையெழுத்துடன் இன்று (31) அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. சந்திரசிறிக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொது, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழியங்கும் நிறுவனங்களில் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் பொதுப் போக்குவரத்துக்கான சரியான செயற்றிட்டம் ஒன்று இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல பிரதேசங்களில் இருந்து மாகாணசபைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகள் தொடர்ச்சியாக சேவைக்கு அழைக்கப்படுகின்றனர். அவை மிக குறுகிய இடப்பரப்பை கொண்டுள்ளமையினால் சமூக இடைவௌியை பேணுவதிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. மேலும் சேவைக்கு சமூகமளிப்பதற்கான போக்குவரத்து தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொதுப் போக்குவரத்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பொது ஊழியர்களுக்கும் சொந்தமான வாகனங்கள் இல்லை. குறிப்பாக பெண் ஊழியர்கள் போக்குவரத்துக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. இல்லாதவர்கள் சேவைக்கு வருவதில் பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.

பயிலுநர் பட்டதாரிகள் அதிக தொகை பணத்தை செலவிட்டு தனியார் வாகனங்களில் சேவைக்கு சமூகமளிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பிரச்சினை, கஷ்டங்களுக்கு மத்தியில் அழைக்கப்படும் நாளில் சேவைக்கு சமூகமளிக்கு முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் சில நிறுவனங்கள் அவற்றை தனிப்பட்ட விடுமுறையில் குறைக்கும் நிலையும் காணப்படுகிறது.

சேவைக்கு அழைக்கப்படும் அதிகாரிகளுக்கு அவசியமான அலுவல வசதிகளை வழங்கும் செயற்றிட்டமோ குறித்த பிரதேசங்களை ஒன்றிணைத்து இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஏற்பாடு செய்வதனூடாக அல்லது நிறுவனம் தனியார் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்துவதனூடாக ஊழியர்களுக்குள்ள போக்குவரத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறித்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட பிரதான செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image