அரச ஊழியர்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்திற்கு விசேட யோசனைகள்

அரச ஊழியர்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்திற்கு விசேட யோசனைகள்

கொவிட் பரவலுக்கு மத்தியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அரச ஊழியரகளின் பாதுகாப்பு தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க,

அரசாங்கம் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெருமளவானோர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்து இருக்கின்றார். அதுமாத்திரமன்றி ஆசிரியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கின்றனர். அரசு சேவையில் பரவல் ஏற்பட்டுள்ளளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் அத்தியாவசிய சேவை என குறிப்பிட்டு அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க சுற்றறிக்கை வெளியிடுகின்றது. ஆனால் அந்த சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

"தனியார் துறையின் நிலை மிகவும் மோசமாகிறது" NLAC ஐ உடன் கூட்டவும்

அரச சேவையில் தற்போது கிராம சேவகர்கள், துறைசார் ஊழியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் தொற்று பரவலுக்கு மத்தியில் பணியாற்றுகின்றனர். கொவிட்-19 தடுப்பூசியை வழங்குமாறும், சுகாதார உபகரணங்களை வழங்குமாறும், போக்குவரத்து வசதிகளை வழங்குமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். இதில் ஒன்றுமே கிடைக்கவில்லை.

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய சேவை வர்த்தமானியை வெளியிடுவதில் இருக்கின்ற ஆர்வம், அரச ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் இல்லை. ஆகக்குறைந்தது தொற்று நீக்கும் சனிடைசர் திரவிய்தையாவது வழங்க வேண்டும். இவற்றுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியாதா? அமைச்சர்களின் பயணங்களுக்காக ப்ராடோ வாகனங்களை கொள்வனவு செய்வதா அரசுக்கு தேவையாக இருக்கின்றது?

பெருந்தொற்றினால் வேலையிழந்த வீட்டுப்பணிப்பெண்களுக்கு உதவுமா அரசு?

இவ்வாறான நிலையில் நாங்கள் சில தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்பட்டுக் கொண்டிருக்குமாயின், நாங்கள் நிச்சயமாக தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகாத வகையிலும் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேநேரம் நாங்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றோம். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறும், சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்குமாறும், போக்குவரத்து வசதிகளை வழங்குமாறும் நாங்கள் யோசனை முன்வைக்கின்றோம்.

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்

போக்குவரத்து வசதியை வழங்க முடியாவிட்டால், குறித்த அரச ஊழியர் வசிக்கின்ற இடத்திற்கு அருகிலுள்ள சேவை நிலையத்தில் அவரை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் யோசனை முன்வைக்கின்றோம் என ஒன்றிணைந்து அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image