"தனியார் துறையின் நிலை மிகவும் மோசமாகிறது" NLAC ஐ உடன் கூட்டவும்

"தனியார் துறையின் நிலை மிகவும் மோசமாகிறது" NLAC ஐ உடன் கூட்டவும்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊழியர்களின் தொழில் தொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளும் முத்தரப்பு செயலணியையும், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையும் உடனடியாக கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.



இலங்கை சுதந்திர ஊழியர்கள் சங்கம், சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை கடலோடிகள் சங்கம், இலங்கை வர்த்தக தொழில்துறை மற்றும் பொது ஊழியர்கள் சங்கம், ஐக்கிய ஊழியர்கள் சம்மேளனம் என்பன தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2,700 அளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவல் இவ்வாறு வேகமாக இடம்பெறும் நிலையில், அதற்கு மிகவும் நெருக்கமான தொழில்துறை இருக்கின்ற ஆடைத் தொழில் துறையில் இரண்டாவது மரணமும் கடந்தவாரம் பதிவானது. தற்போது சுதந்திர வர்த்தக வலையத்திலும், அதற்கு அப்பாலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேநேரம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தொழிற்சாலைகள் பிரதேசவாசிகளின் தலையீட்டுடன் தற்போது மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் தங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் இயஙகும் முத்தரப்பு செயலணியை உடனடியாக கூட்டுமாறு கோரியபோதும், 2021 மார்ச் மாதம் 3ஆம் திகதியின் பின்னர், சுமார் மூன்றுமாத காலமாக அதனை கூட்டாதமை தொடர்பில் அதன் செயற்பாட்டு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் எங்களுடைய கவலையை பதிவு செய்கின்றோம்.

அதேநேரம், தனியார் துறையிலும், பெருந்தோட்ட துறையிலும் ஊழியர்களுக்கு தாக்கம் செலுத்தும் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரித்தல், சம்பள நிர்ணய சபை கட்டளைச் சட்டத்தின் 59 ஆம் இலக்க சரத்தை திருத்தத்திற்கு உட்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக சில விடயங்கள் குறித்து கலந்துரையாட படவேண்டி உள்ளது

அது குறித்து கலந்துரையாடுவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை, கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதியின் பின்னர் இரண்டு மாதத்திற்கும் அதிககாலம் கூட்டப்படவில்லை.

தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் செயற்படுவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு அமைச்சான தொழில் அமைச்சு மற்றும் ஒரே ஒரு திணைக்களமான தொழில் திணைக்களம் என்பன செயலற்ற நிலையில் இருக்கின்றமை தொடர்பில் நாங்கள் எங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கின்றோம்.

இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்று 7 நாட்களுக்குள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள முத்தரப்பு செயலணி மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை எனபனவற்றைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறின்றேல், பொறுப்புவாய்ந்த தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் அறிய படுத்துகின்றோம்.

- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image