அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை
நாளை (28) முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலக உள்ளதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
 
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இன்று (27) அனுப்பி வைத்துள்ள  கடிதம் ஒன்றில் அந்த சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
கடந்த 25ஆம் திகதி உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, பிரதேச செயலக காரியாலயங்களில் சேவை புரியும்  உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதாக  தெரிவித்தபோதும், இதுவரையில் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
 
மாத்தறை மாவட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதும், சுகாதார அமைச்சினால் அதற்கான அனுமதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து தடுப்பூசி வழங்கல் கைவிடப்பட்டுள்ளது.
 
கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை காரணமாக அவர்களினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த சில கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது சுமத்துவதற்கு நிறுவன பிரதானிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளனர்.
 
இவ்வாறாக தொடர்ச்சியாக உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக,பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுகின்ற காரணத்தினால் கொரோனா தடுப்பூசி வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொவிட்-19 தடுப்பு பணிகளில் இருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கையானது, விருப்பமில்லாதபோதும் நாளையதினம் (28) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் அனுராத செனவிரத்னவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
188702415_1348216875564042_2199946888991802551_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image