இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- அமெரிக்கா

இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- அமெரிக்கா

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணிப்பது பாதுகாப்பற்றது. எனவே அந்நாடுகளுக்குப் பயணிக்கவேண்டாம் என்று குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நாடுகளில் தற்போது ஆரம்பித்துள்ள புதிய கொரோன வைரஸ் அலையானது, நான்காம் கட்டத்தில் உள்ளதால் அந்நாடுகளுக்கு பயணிப்பது இப்போதைய சூழ்நிலையில் உசிதமற்றது என்று அந்நாட்டு அரசாங்கம் நேற்று (25) குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஒரு புதிய எச்சரித்துள்ளதுடன் அவ்வாறு செல்வதாயின் அதற்கு முன்னர் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தற்போதைய நிலைமையானது தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகளுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அம்மமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில் தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஒரு தடவை ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றுவரை ஜப்பானில் 7 இலட்சத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். உலக சுகாதார தாபனம் இன்று (25) வழங்கிய தகவல்களின்படி நேற்றுவரை 7,14,274 தொற்றாளர் பதிவாகியுள்ளதுடன் 12,236 மரணங்கள் பதிவாகியுள்ளன. மே மாதம் 15ம் திகதி வரை 5,593,436 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் நேற்று 2,971 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்தமாக 167,172 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-ரொய்டர்ஸ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image