15 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை, உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த அமைச்சரவை தீர்மானம் வருமாறு,
07. Sinopharm மற்றும் Oxford – AstraZeneca தடுப்பூசிகள் கொள்வனவு செய்தல்
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றுவதே தீர்வு எனும் நிலைமையின் கீழ், மிகவும் விரைவாக தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டியுள்ளது. இவ்வருடத்தின் இறுதியில் மொத்த சனத்தொகையில் 60% - 70% வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, துரிதமாக 14 மில்லியன்கள் Sinopharm தடுப்பூசிகளை சினாவின் குறித்த உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும், 01 மில்லியன் Oxford – AstraZeneca தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.