அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிவித்தல்

மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக பணிக்குழாம், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு உரிய

அனைத்து அலுவலக மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கும், உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆமைச்சருக்கு நேற்று (24) கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக பணிக்குழாம், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு உரிய அனைத்து அதிகாரிகளும், கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், தங்களது பணியை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர்.

இதன் காரணமாக, அவர்கள் கடுமையாக அவதானம் மிக்கி நிலையை எதிர்கொள்ளவேண்டியுள்ளனர்.

இது குறித்து எனது அமைச்சின் செயலாளரினால் உங்கள் அமைச்சுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

துற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டத்தின் புதிய அத்தியாயத்தின்கீழ், அவதானம்மிக்க தரப்பினருக்காக தடுப்பூசி செலுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச இயந்திரத்தையும், பொதுமக்களின் வாழ்வியலையும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்காக சிறந்த சேவையை ஆற்றும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக பணிக்குழாம், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு உரிய அனைத்து அலுவலக மற்றும் துறைசார் பணிக்குழாமினருக்காக முன்னுரிமை வழங்கி, உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image