அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் III பதவிகளுக்காக நியமிக்கப்பட்டாத, பல்வேறு காரணங்களினால் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முடியாமல் போன பயிலுனர் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவை ஏப்ரல் மாதத்திற்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு கடந்த 7ஆம் திகதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியினால் இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில்,
'பயிலுனர் பட்டதாரிகள் 2009 கட்டம் II மற்றும் கட்டம் III என்பவற்றின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III க்கு நியமித்தல் 2021' என்ற தலைப்பில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் III பதவிகளுக்காக நியமிக்கப்பட்டாத, பல்வேறு காரணங்களினால் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முடியாமல் போன பயிலுனர் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவை ஏப்ரல் மாதத்திற்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. இது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் பிரதான நிதி அதிகாரியை வினவி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தயவுடன் அறியப்படுத்தப்படுகின்றது.
3. இது தொடர்பில் நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மதிக்கத்தக்கதாகும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.