அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டியது: இன்று முதல் இதுதான் நடைமுறை
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக அமுலில் இருந்த நடமாட்டத்தடை இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையில் நடமாட்டத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, இன்று முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பூச்சியம் மற்றும் இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.
இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்றுமுதல் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியில் செல்வோர், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தினால், அவற்றில் உள்ள அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் நடமாட முடியுமே தவிர, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திர இலக்கங்கள் அடிப்படையில் அல்ல எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
நாட்டின் பல பாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - பல பகுதிகள் விடுவிக்கப்பட்டன