பாடசாலைகளை மீள திறப்பது எப்போது? கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளை மீள திறப்பது எப்போது? கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார நிபுணர் உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதன்போது பாடசாலைகள், பல்கலைகழகங்கள், முன்பள்ளிகள் என்பனவற்றை மீள திறப்பது குறித்த யோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தொழிநுட்ப வசதிகளின் ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், இந்த வசதிகள் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேசங்களிலும் சாத்தியமில்லாத தன்மை காணப்படுகின்றது.

எனவே, சுகாதார நிபுணர்களின் உரிய ஆலோசனையின் அடிப்படையில் உடனடியாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை: போட்டிப் பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image