கொவிட் பரவல்- விஞ்ஞானரீியில் கண்காணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை - ரவி குமுதேஷ்
கொவிட் பரவலை விஞ்ஞான ரீதியில் கண்காணிக்கும் நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களின் இலங்கை சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்புநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோய் பரவல் எவ்வாறான விதத்தில் காணப்படுகின்றது என்பதை விஞ்ஞானரீதியில் கண்காணிக்கும் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விரிவான ஆய்வக சோதனைகளின் அடிப்படையில் 17ம் திகதி வரை 103640 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் தொற்றுநோயியல் பிரிவின் தரவுகள் 96 439 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர் என காண்பிக்கின்றன. பிசிஆர் சோதனைகளை குறைப்பதன் மூலம் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
ஏப்பிரல் பத்தாம் திகதி 8000 பிசிஆர் சோதனைகள் மூலம் 412 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். ஆனால் ஏப்பிரல் 14 திகதி 4000 சோதனைகளே இடம்பெற்றன 157 நோயாளர்கள்அடையாளம் காணப்பட்டனர்.
ஏப்பிரல் 17 ம் திகதி 6000 பிசிஆர் சோதனைகள் இடம்பெற்றன 357 பேர் இனம்காணப்பட்டனர். இந்த புள்ளிவிபரங்கள் சோதனைகள் குறைவடையும் போது கண்டுபிடிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைவதை வெளிப்படுத்துகின்றன என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் எந்தவிதமான விஞ்ஞான கண்காணிப்பினையும் முன்னெடுக்கவில்லை இந்த நிலை தொடர்ந்தால் இலங்கைக்கு ஆபத்து எனவும் ரவிகுமுதேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.