உணவு பொருள் இறக்குமதியில் ஆரோக்கியம் குறித்த ஆராய திட்டம் அவசியம்
உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் ஆரோக்கியம் குறித்து ஆராய திட்டமொன்றை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் ஆரோக்கியத் தன்மை குறித்த அறிய உரிய திட்டமில்லாமையினால் உடலுக்கு ஒவ்வாது பல உணவுப் பொருட்களை மக்கள் உட்கொள்ளவேண்டியேற்படுவதாக அரச வைத்திய அதிகாரகிள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் நாட்டில் இவ்வாறான அமைதியின்மை ஏற்படுவது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான நிலை ஏற்பட்டது. 2019ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 நிறுவனங்களினால் எஃபலடொக்ஸின் அடங்கிய செத்தல் மிளகாய் 200 மெற்றிக் டொன்னுக்கும் அதிகமாக சந்தையில் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் பெறும் அமைதியின்மையை ஏற்பட்டது.
பகுப்பாய்வு அறிக்கை பெற முதல் அவற்றை வௌியேற்றியமை தொடர்பில் சுங்கத் திணைக்களத்தில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் தர அறிக்கைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதையும், அதுவரை நிறுவனங்களின் களஞ்சியசாலைகளுக்கு கொள்கலன்களை விடுவிப்பதையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்வது மிக அவசியம்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆய்வக அறிக்கைகளில் நிரூபிக்கப்பட்டபோதிலும் அந்த உணவுப் பொருளை சந்தைக்கு விநியோகிக்கப்படுவதானது, அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. "மக்களின் ஆரோக்கியத்தை விட வணிகத் தேவைகள் முக்கியமா என்று எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. கடந்த காலங்களில் மிளகாய் இறக்குமதி செய்வதிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது, ஆனால் அவை கடந்த கால விடயங்களாகிவிட்டன என்றும் டொக்டர் சமந்த தெரிவித்துள்ளார்.