இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர்தின நிகழ்வுகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர்தின நிகழ்வுகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் கொட்டகலை சீ.எல்.எவ் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தினம் பல்வேறு பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இ.தொ.கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர்கள் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களுக்கு மூத்த தலைவர்கள் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர மற்றும் பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

06.jpg

08.jpg

01.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image