கொவிட்19 பரவல் காரணமாக தொழில்களை இழந்த தனியார் துறை சேவையாளர்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வழங்க முடியும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் துறையில் சேவைகளை இழந்தவர்கள், பணியிடம், சேவை காலம் மற்றும் வேதன பற்றுச்சீட்டு ஆகியவற்றை குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அமைச்சு கோரியுள்ளது.
இதுதவிர குறித்த தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக தொழில் ஆணையாளர், 11வது மாடி கொழும்பு 5 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.