புதிய வைரஸால் நாடுமுழுவதும் முடக்கப்படுமா? முக்கிய அறிவித்தல் இதோ...

புதிய வைரஸால் நாடுமுழுவதும் முடக்கப்படுமா? முக்கிய அறிவித்தல் இதோ...

புதிய வீரியம் மிக்க வைரஸ் காரணமாக கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நாடுமுழுவதும் முடக்க நிலையை

அமுலாக்குவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படாதுள்ள போதிலும், கொவிட் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் நாளை கூடும்போது, இது குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாரஇறுதி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதுவரையில் முழு நாட்டையும் முடக்குவது குறித்த எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், கொவிட் பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தினால், நாளை இந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக  பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image