பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம்

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சௌபாக்கியத்திற்கான நோக்கு' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த காணி உரிமை தொடர்பாக தான் நியமித்திருந்த விசேட குழுவுடனான கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (10) இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

இதன்போது, இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு இதிலுள்ள தடைகளையும் சிக்கல்களையும் நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

இதனடிப்படையில் முதற்கட்டமாக நுவரரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுபோல ஏனைய பகுதிகளில் இந்த செயற்பாட்டினை விஸ்தரிப்பது பற்றியும் மக்களுக்கு விரைவாக காணி பத்திரங்களை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், பெருந்தோட்ட மக்களிடம் காணி உறுதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு அவர்கள் முகம்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், சுயதொழில் முன்னெடுப்பு மற்றும் நுண்கடன் பெறுதல் போன்ற பல சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்.

இதன்போது கருத்து தெரிவித்த பெருந்தோட்ட யாக்கங்கங்கள், இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது எமது மக்களுக்கும் மிகவும் பயனளிப்பதாகவும் உந்து சக்தியாகவும் திகழும் என தெரிவித்த அதேவேளை, இந்த வேலைத்திட்டத்திற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இந்தத் திட்டத்திற்காக அமைச்சின் ஊடாகவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினுடாகவும், காணி அமைச்சினுடாகவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. – என்றார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி, அதிகார சபையின் பணிப்பாளர் காந்தி சௌந்தர்ராஜன், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி, அமைச்சின் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர், அரச பெருத்தோட்ட யாக்கங்களின் சில பணிப்பாளர்கள், மக்கள் பெருந்தோட்ட யாக்கங்களின் பொது முகாமையாளர்கள், காணி மறுசீரமைப்பின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image