இரு துறைகளை சேர்ந்தோருக்கு முன்கூட்டிய வாக்களிப்பு வசதி

இரு துறைகளை சேர்ந்தோருக்கு முன்கூட்டிய வாக்களிப்பு வசதி

வைத்தியத்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபடும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்காளிக்க முடியாமல்போன தரப்பினருக்காக, முன்கூட்டிய வாக்களிப்பு முறைமையுடனான புதிய தேர்தல் சட்டத் திருத்தம் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும். வைத்தியத்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு, பல்வேறு பணிகளின் காரணமாக குறித்த தினத்தில் வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவானதாகும்.

அவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபடும் வகையில், வாக்களிப்பு முறைமையில் திருத்தம் மேற்கொள்வதற்கான செயன்முறைகள் கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், 18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு, அந்த வயது பூர்த்தியடைந்த உடனேயே, வாக்கை பயன்படுத்துவதற்கான சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டியுள்ளமையினால், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக, தற்போதுள்ள சில தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமையை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image