'ஆயிரம்' ரூபா சம்பள அதிகரிப்பு, தொழிலாளருக்கு சாதகமா? பாதகமா?

'ஆயிரம்' ரூபா சம்பள அதிகரிப்பு, தொழிலாளருக்கு சாதகமா? பாதகமா?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1000 சம்பளம் பெற்றுக் கொடுப்பதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கபப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கமும் ஏற்படாத நிலையில் சமபள நிர்ணய சபை ஊடாக தீர்வு காண்பதற்கு தொழில் அமைச்சர் கடந்த வாரம் தீர்மானித்தார்.


அதன் அடிப்படையில் 08.02.2021 திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபை தொழிற் திணைக்களத்தில் கூடியது இதன் போது தொழிற்சங்கங்கள் சார்பில் எட்டு பேர்; பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் சார்பில் எட்டு பேர்; தொழில் அரசாங்கத்தின் சார்பில் மூவர் என பத்தொன்பது பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இங்கு தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறைகளுக்கான பேச்சுவார்த்தை இங்கு நடைபெற்றதுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையூடாக தற்போது ரூபா 405 அடிப்படை சம்பளமாக வழங்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியது.

இதனை எதிர்த்த தொழில் ஆணையாளர் ரூபா 900 அடிப்படை சமபளமும் ரூபா 140 வாழ்க்கை செலவு கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என் வழியுறுத்தினார். அதற்கமைய ரூபா 1040 சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. 19 பேரை கொண்ட சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் எட்டு பேரும் இந்த 1040 ரூபா சம்பள கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தனர். எனினும் தொழிற்சங்க பிரதிநிதிகள் எட்டு பேரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மூவரும் ரூபா 1040 ஐ ஆதரித்து வாக்களித்தனர்.

இந்நிலையில் ரூபா 900 அடிப்படை சம்பளமும் பாதீட்டு கொடுப்பனவாக ரூபா 100 வழங்குவதற்கான முடிவை தொழில் அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் இந்த தொகை வழங்குவதாக இருந்தால்; மாதத்திற்கு 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்ததுடன் கூட்டு ஒப்பந்தத்ததை செல்லுப்படியற்றதாக ஆக்குவதாகவும் நலன்புரி விடயங்களை தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தது. அத்துடன் மேலதிக கொழுந்திற்கான கொடுப்பனவும் கொடுக்க முடியாது என்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அதனை தாம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் அறிவித்து தாம் சட்டபூர்வமாக்க உள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார். இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காத நிலையில் ரூபா 1000 ஐ இலகுவாக பெற்றக் கொள்ளக்கூடிய வகையிலான முறைமை ஒன்றை வழங்கியுள்ளோம் தற்போது சிறப்பாக வேலை செய்பவர்கள் இதனை உழைக்கின்றனர் எனினும் தொழிற்சங்கத்தினர் அதனை ஆயிரம் ரூபா சம்பளம்- சாதகமா? பாதகமா?

விரும்பவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த விடயம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட உடன் நாட்டின் சட்டம் என்பதால் நாம் அதற்கு கீழ்படிவோம். எனினும் அதற்கமைய எமது தோட்ட கட்டமைப்பும் செயற்படும் இதுவரை காணப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நிச்சயம் இரத்தாகும். சம்பள நிர்ணய சபையில் அடிப்படை சம்பளம் மாத்திரம் தீர்மானிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டி ஏற்படும். இரண்டு சட்டங்களுக்க எம்மால் அடிப்பனிய முடியாது இதுவரை கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில் செயற்பட்டோம் இனி சம்பள நிர்ணய சபையின் அடிப்படையில் செயற்படுவோம் என தெரிவித்தார்.

இங்கு நாளொன்றுக்கு ரூபா 900 அடிப்படை சம்பளமாக கிடைப்பதுடன் 140 வாழ்க்கை செலவு கொடுப்பனவும் கிடைக்கும். இது வேலை வழங்கப்படும் 13 நாட்களுக்கு கிடைக்கும் சம்பளம் ரூபா 13000 ஆகும்;. அப்படியென்றால் நாள் ஒன்றிற்கு 13000/30 = 433.33 ஆகும். இதற்கு முன்னர் ரூபா 740 என்ற சம்பளத்தின் அடிப்படையில் 25 நாட்கள் வேலை கிடைத்த நிலையில் 750ழx25= 18750.00 ரூபா கிடைத்தது.

இந்நிலையில் இந்த புதிய ரூபா 1000 சம்பளம் தொழிலாளர்களுக்க எந்த நன்மையையும் செய்யவில்லை என்பதையே காட்டுகின்றது. காரணம் சம்பளத்திலும் சுமார் ரூபா 5750 குறைவடைகிறது. அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நலன்புரி விடயங்களும் இல்லாமல் போயுள்ளமை பெரும் இழப்பாகவே காணப்படுகின்றது.
அடிப்படை சம்பளம் ரூபா 700 ஆக காணப்பட்ட போது ஊழியர் சேம இலாப நிதியத்திற்கு ரூபா 70 ஐ தொழிலாளர்கள் பெற்றுக் கொடுத்ததுடன் முகாமை ரூபா 105 ஐ பெற்றுக் கொடுத்தது இதன் அடிப்படையில் தொழிலாளிக்கு தினமும் 175 ரூபா எதிர்கால சேமிப்பாக காணப்பட்டது மேலும் தொழிற்சங்கங்களுக்கு மாதம் 233 ரூபாவை சந்தாவாகவும் தொழிலாளர்கள் பெற்றக் கொடுத்தனர்.

இநத சம்பள அதிகரிப்பு மூலம் தொழிலாளர் ரூபா 90 ஐ ஊழியர் சேம இலாபத்திற்கு பெற்றுக் கொடுக்க முகாமை ரூபா 135 ஐ ஊழியர் சேம இலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியாக பெற்றக் கொடுப்பதன் மூலம் தினமும் ரூபா 225 ஐ எதிர்கால சேமிப்பாக பெறும் நிலை உருவாகியுள்ளது. எனினும் அவர்களின் மாதாந்த செலவுக்கான தொகை பல ஆயிரங்களால் குறைவடையும் நிலை உருவாகியுள்ளது.

இங்கு தொழிற்சங்கங்கள் ரூபா 300 ஐ தமது மாதாந்த சந்தாவாக ஒவ்வொரு தொழிலாளியிடம் பெற்றக்கொள்ளும். இது தொழிற்சங்கங்களுக்கு பெரும் இலாபமாக அமைந்துள்ளது. காரணம் தற்போது ரூபா 233 என்ற தொகை ரூபா 300 ஆக மாற்றமடைகின்றது இங்கு தொழிற்சங்க அங்கத்தவர்களை பொருத்து பல இலட்சங்கள் சந்தாவாக தொழிற்சங்கங்களுக்க கிடைக்க உள்ளது. இந்த சமபள பேச்சவார்ததை எப்படியோ தொழிறசங்கங்களை மேலும் பணம் படைத்த நிறுவனங்களாக மாற்றமடைய செய்யவுள்ளது.
இந்த நிலைமையை தொழிலாளர்கள் புரிந்து கொள்வது எப்போது என்பது காலாகாலமாக கேள்விகுறியாகவே தொக்கி நிக்கின்றது.

இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் உறுதியளித்ததுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பில், அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது என்பதையும் தெரிவித்தேன். அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால் அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறது என்றும் அந்தப் பதிலடி ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கையும் விடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

R. ராஜேஸ்வரன்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image