நிறுவனங்களின் பிரதானிகளின் அவசியத்தன்மையின் அடிப்படையில், அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்ணசிறியினால், அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும், இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதில் கடந்த சில மாதங்களாக சில வரையறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், நாளை முதல் நிறுவனங்களின் பிரதானிகளின் அவசியத் தன்மையின் அடிப்படையில், அனைத்து ஊழியர்களையும் சேவைக்கு அழைக்கக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.